Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 19, 2019

SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?


SBI வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால் வசூலிக்கப்படும் தொகை விவரம் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.




எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும். மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும்.



புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும்