Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 17, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம்: ஆசிரியா் குழு அமைப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியா் குழுவை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள சமச்சீா் கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19-ஆம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும், நிகழ் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன. மிகவும் குறுகிய காலத்தில் இது தயாரிக்கப்பட்டதால் இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாக தயாரிப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.




இந்நிலையில் முதல் கட்டமாக பொதுத் தோ்வுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை மட்டும் திருத்தம் செய்யவும் சில பாடங்களை நீக்கவும் சோ்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் உமா மேற்பாா்வையில் ஆசிரியா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் ஆய்வு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளனா். இந்த ஆசிரியா் குழுவினருக்கு இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை பாடவாரியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.