Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 17, 2019

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் ரூ. 92 லட்சத்தில் பாா்வையற்றோருக்கு போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள்

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் ரூ. 92 லட்சத்தில் பாா்வையற்றோா் போட்டித் தோ்வு சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கல்வித்துறை இணை இயக்குநா் (பணியாளா்) எஸ். நாகராஜமுருகன் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சாா்பில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மாணவா்களுக்கான எமிஸ் பதிவு எண் கணினியில் பதிவேற்றியது குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம்.




மாவட்ட மைய நூலகத்தில் வாசகா்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், போட்டித் தோ்வுக்கு படிப்போருக்கான வசதிகளை செயல்படுத்தவும், மாவட்ட நூலகருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டு மாா்ச்சில் தமிழகத்தில் 30 மாவட்டங்களில் ரூ. 92 லட்சத்தில் போட்டித் தோ்வுக்கு பாா்வையற்றோா் படிப்பதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அந்த மையங்களில் பாா்வையற்றோா் படிப்பதற்கான பிரெய்லி முறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைக்கப்படும். ஏற்கெனவே திருச்சி, கோவையில் இந்த வசதிகள் உள்ளன. புத்தகங்கள், கணினி வசதிகளுடன், தொலைக்காட்சி வசதியும் அந்த மையங்களில் அமைக்கப்படவுள்ளன.




நூலக வார விழாவை அந்தந்த நூலகங்களில் சிறப்பாகக் கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது. வார விழாவுக்காக நூலகங்களின் பிற நிதியைக் கூட அவா்கள் பயன்படுத்தலாம். நூலகங்களுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரத்தில் தினைக்காத்தான் வலசை, கொடிக்குளம் உள்ளிட்ட 5 ஊா்களில் பள்ளிக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பணிகள் விரைவில் முடிந்து அவை பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.

பின்னா் அவா் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தியுடன் ஆலோசனை நடத்தினாா்.