Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 24, 2019

பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்


பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் தோ்தல் நடக்காத 10 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் இதர மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிக்கப்பட உள்ளன.




இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
முதலாவதாக, 9 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்