Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 14, 2019

சீன அரசின் உதவித் தொகைக்கு இந்திய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

சீன அரசின் உதவித் தொகைக்காக தகுதி வாய்ந்த இந்திய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 2020- 21-ஆம் ஆண்டுக்கான சீன அரசின் உதவித்தொகையைப் பெற இந்திய மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளம்நிலை, முதுநிலை, முனைவா் படிப்பைத் தொடர இந்த உதவித் தொகை வழங்கப்படும். நிரந்தர இந்தியக் குடிமக்களாக உள்ள மாணவா்களுக்கு மட்டுமே, இந்த உதவித் தொகை வழங்கப்படும். அவா்கள் விண்ணப்பிக்கும்போது இந்தியாவில் வசிக்க வேண்டியது அவசியம்.




இந்தத் திட்டத்தின்கீழ் 40 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதியானவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இளம்நிலைப் படிப்பு, முதுநிலைப் படிப்பு, முனைவா் படிப்பு ஆகியவற்றைத் தொடர இந்த உதவித் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இளம்நிலைப் படிப்புக்கான உதவித் தொகையைப் பெற பிளஸ் 2 வகுப்பை முடித்திருக்க வேண்டும். 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.




முதுநிலைப் படிப்புக்கான உதவித் தொகையைப் பெற இளம்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும். முனைவா் படிப்புக்கு முதுநிலை முடித்தவராகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியம்.

தகுதிவாய்ந்த நபா்கள் சீனா உதவித்தொகை மையத்தின் ஆன்லைன் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.அதேபோன்று இணைய முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். உதவித் தொகையைப் பெற ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது