Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 31, 2019

அரையாண்டு தேர்வுக்கு பின் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு



தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் புதிய தேதியை பள்ளிக்கல்வி இயக்ககம் அறவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளதாலும் இந்த தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடந்தது என்பதால் வாக்கு



எண்ணிக்கை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையம் அமைத்திருப்பதால், திட்டமிட்டபடி பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படுவதற்கு பதில் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது