Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 17, 2019

பயிற்சியுடன் கூடிய கால்நடை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

தமிழ்நாடு அரசின்கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளர் நிலை 2 பதவிக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பயிற்சிப் பணிகள்:

கால்நடை ஆய்வாளர் (நிலை - 2)

பயிற்சிக் காலம்: 11 மாதங்கள்

காலியிடங்கள்:

மொத்தம் = 583 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019, மாலை 05.45 மணி வரை

இதையும் படிக்க: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.




அதிகபட்ச வயது வரம்பு:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: 35 வயது
2. பி.சி / எம்.பி.சி பிரிவினர்: 32 வயது
3. பொதுப் பிரிவினர்: 30 வயது

தேர்வுக்கட்டணம்: ரூ.100
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், திருநங்கைகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

குறிப்பு:

தேர்வுக்கட்டணத்திற்கான வங்கி வரைவோலையினை இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், சென்னை - 35 (In favour of 'Director of Animal Husbandry and Veterinary Services, Chennai - 35') என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியிலிருந்து எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.

கல்வித்தகுதி:




கால்நடை ஆய்வாளர் என்ற பணிக்கு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில், www.tn.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், எண்.571, அண்ணாசாலை, சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

11 மாத பயிற்சிக்கு பின்னர்தான் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.






தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத் தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற, https://www.tn.gov.in/job_opportunity- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.