Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 26, 2019

வினாத்தாள் விவகாரத்திற்கு செக்..வைத்த செங்கோட்டையன்



வினாத்தாள் இனி வெளியாகாது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி வெளியாகாமல் இருக்க புதிய திட்டம் வருகிறது என்றும் அறிவிப்பு




தமிழம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறையும் அளிக்கப்பட்டு விட்டது.ஆனால் தேர்வு நடைபெறும் சமயத்தில் சமூகவலை தளங்களில் வினாத்தாள் வெளியாகியது இது மாணவகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்தாலும் ஆசியர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.இந்நிலையில் வினாத்தாள் விவகாரம் சற்று விஷவரூபம் எடுக்கவே கல்வி அமைச்சரின் காதிற்கு சென்றது.அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில் பள்ளித்தேர்வு வினாத் தாள்கள் இனிமேல் வெளியாகாது.



அப்படி வினாத்தாள்கள் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகிறது.அந்த திட்டம் மூலம் வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்கள்.இதன் மூலம் இனி வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.