Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 1, 2020

குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.




இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான பட்டியலை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




குரூப் 1 தேர்வர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும். தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகியவற்றில் வெளியிடப்படும். இதில் துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை, உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.