Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 10, 2020

25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு





சென்னை: ஓமன் நாட்டில் முன்னணி நிறுவனத்தில் பணியாற்ற 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சியுடன் ஓஎச்எல் எக்யூப்மென்ட் 33 கே.வி., டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்டிரிபியூசன், டவர் மெய்டென்ஸ் 11/33/132 கே.வி. ஓஎச்எல் மற்றும் எச்டி ஓவர் ஹெட் பழுது பார்த்தல் ஆகிய பிரிவுகளில் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்.




தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு 33,000 முதல் பணி அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன் மின்னஞ்சல் அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42. ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com வாயிலாகவும் மற்றும் 044-22505886, 8220634389, 22502267 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.