Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 26, 2020

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை



தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேலாளர்




காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். எம்பிசி, பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு 32க்குள்ளும், எஸ்சி,எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது மீன்வள தொழில்நுட்பம் அல்லது விலங்கியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை: tnfdcl.onlineregistrationform.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2020