Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 10, 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், குடிமக்களிடம் கேட்கப்பட கேள்விகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வரும் நிலையில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின் தற்போது 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த பணியின்போது கேட்கப்படும் கேள்விகள் இவைகள் தான்:




1. உள்ளாட்சி நிர்வாகம் ஒதுக்கிய வீட்டின் எண்,
2. கணகெடுப்புக்கான வீட்டின் எண்,
3. வீட்டின் கட்டுமானம்,
4. வீட்டின் நிலை,
5. வீட்டில் தங்கியுள்ளவர்கள் விபரம்,
6. குடும்பத் தலைவரின் பெயர்,
7. குடும்பத் தலைவரின் பாலினம்,
8. குடும்பத் தலைவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவரா?,
9. வீட்டின் உரிமையாளர் நிலை,
10. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை,
11. வீட்டில் உள்ள திருமணமானவர்களின் எண்ணிக்கை,




12. முக்கிய குடிநீர் ஆதாரம்,
13. குடிநீர் இணைப்பு வழிகள்,
14. மின் இணைப்பு விபரம்,
15. கழிவறை வசதி,
16. கழிவறையின் வகை,
17. கழிவு நீர் வடிகால்,
18. குளியளறை,
19. சமையலறை வசதி
20. எல்.பி.ஜி இணைப்பு,
21. சமயலுக்கான எரிபொருள்,
22. ரேடியோ வசதி,
23. டிவி வசதி,
24. இணைய வசதி,




25. லேப்டாப்/கம்ப்யூட்டர்,
26. தொலைபேசி / செல்பேசி / ஸ்மார்ட்போன்,
27. சைக்கிள் / ஸ்கூட்டர் / பைக் / மொபெட்,
28. கார் / ஜீப் / வேன்,
29. செல்போன் எண்
ஆகிய தகவல்கள் பெறப்படுகிறது.