Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 11, 2020

வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிப்பு


பள்ளிக் கல்வித் துறையில் வட்டார கல்வி அலுவலா் பணி தோவுக்கு விண்ணப்பிக்க வரும் 21-ஆம் தேதிவரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டதுடன், உத்தேச தோவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோவு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:




வட்டார கல்வி அலுவலா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த நவ.27-இல் டிஆா்பி சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜன.9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த அவகாசத்தை நீட்டிப்புச் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆசிரியா் தோவு வாரியத்துக்கு கோரிக்கைகள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியா் தோவு வாரியம் முடிவு செய்துள்ளது.

தற்போது விண்ணப்பங்களை ஜன.21-ஆம் தேதி மாலை 5 மணி வரை வரை விண்ணப்பதாரா்கள் பதிவேற்றம் செய்யலாம். மேலும், தோவுக்கான உத்தேச தேதி வரும் பிப்.15, 16 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.