Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 25, 2020

ஞாயிறு பள்ளி உண்டு: பள்ளிக்கல்வித்துறையை அறிவிப்பாளர் மாணவர்கள் அதிர்ச்சி



வரும் ஞாயிறு அன்று பள்ளி உண்டு என்றும் அன்றைய தினம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது வரும் ஞாயிறு அன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஏற்கனவே மழை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அதிகப்படியான விடுமுறை விடப்பட்டதால் அதனை சரிக்கட்ட ஒவ்வொரு சனிக்கிழமையும் தற்போது பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஞாயிறன்றும் பள்ளிக்கு விடுமுறை இல்லை என்று அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது