Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 13, 2020

வேண்டாம் உங்கள் பொங்கல் விடுமுறை! ( படித்ததில் பிடித்தது )



வேண்டாம் உங்கள் விடுமுறை
பள்ளியில்
பொங்கல் வைப்பதா .
வேண்டாமா
பெருங்குழப்பம்
வேண்டாம் உங்கள்
விடுமுறை




கரும்பு வாஙகவா
வேண்டாமா
கவலையில்
வேண்டாம் உங்கள் விடுமுறை

வந்தது போனது
எல்லாம்
வாட்ஸ்அப் பில் ...
வேண்டாம் உங்கள் விடுமுறை

பலநாள் விடுமுறை
பழித்து பேசும்
சமூகம்
வேண்டாம் உங்கள் விடுமுறை

இந்த நாள்
விடுமுறை எனில்
இனியொரு நாள்
வேலை நாள் தானே..
வேண்டாம் உங்கள் விடுமுறை




ஐந்து நாள்
வேலைசெய்து
ஆறாம் நாள்
வேளை
அலுப்பாய் போனது
எனக்கு
வேண்டாம் உங்கள் விடுமுறை

பள்ளி விடுமுறை
விடுவதில்
பரமபத
அரசியல்
வேண்டாம் உங்கள் விடுமுறை




மாணவர்களுடன்
மாணவராக
எம்மண்ணின்
பண்டிகை
கொண்டாட
ஆயத்தம் ஆனேன்
ஆசிரியராக
வேண்டாம் உங்கள் விடுமுறை.