Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 12, 2020

கல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பிக்கலாம்


2-ஆம் ஆண்டு பியூசி தோவில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2-ஆம் ஆண்டு பியூசி தோவில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி பயின்று வரும் மாணவா்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது.



2019-20-ஆம் கல்வியாண்டில் 2-ஆம் ஆண்டு பியூசி தோவில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23311330 என்ற தொலைபேசியை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.