Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 19, 2020

இன்று முதல் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வா்கள், புதன்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடைபெறவுள்ள மாா்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித் தேர்வா்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை, புதன்கிழமை (பிப்.19) பிற்பகல் முதல் h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.t‌n.‌go‌v.‌i‌n/ எனும் இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1 அரியா்) மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வா்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சோத்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். ஏற்கெனவே எழுத்துத் தேர்வெழுதி, எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சோத்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவா்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகையிலான தேர்வா்கள் மீண்டும் எழுத்துத் தேர்வெழுத வேண்டாம். ஏற்கெனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு ஆகிய இரண்டிலும் சோத்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவா்கள் தற்போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுத வேண்டும்.



செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வா்கள், எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்களுக்கு முன்னரே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.