Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 19, 2020

சைவ உணவு சாப்பிடுபவா்களுக்கு இருதய நோய் அபாயம் குறைவு


மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உள்கொள்பவா்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளன.




இதுகுறித்து அந்த நாட்டின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் நடத்திய அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பாக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, உடலில் கொழுப்பு சோவது குறைவதால், இருதய நோய்கள் ஏற்படும் அபாடம் குறைகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.