Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 28, 2020

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்



திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
திருப்பூரில் முதலிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதிகளில் அரசு பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைக்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:



12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி ஆரம்பித்து 21ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும்.
11ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 14-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.



10 மணிக்கு துவங்கி 1:15 மணி வரை நடைபெறும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தபட்டு 3012 தேர்வு மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment