Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 28, 2020

பொதுத்தேர்வில் முறைகேடு- தண்டனை விவரம் வெளியீடு!



10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் (DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS) வெளியிட்டுள்ளது. அதில் எந்த முறைகேட்டுக்கு என்ன தண்டனை என்பது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அதன்படி காப்பி அடித்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபட்டால் அடுத்த இரண்டு முறை தேர்வு எழுத முடியாது. வினாத்தாளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாளில் விடைகளை குறித்து அடுத்த மாணவருக்கு தந்தால் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment