Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 7, 2020

பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: 17 இடங்களில் நாளை நடக்கிறது



சென்னை: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நாளை சென்னையில் 17 இடங்களில் நடக்கிறது.இதுகுறித்து



தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு பிப்ரவரி மாதத்திற்கான ரேஷனர் கார்டு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (சனி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன்



எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சென்னையில் உள்ள 17 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.