Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 7, 2020

வாரத்தில் 2 நாள் முருங்கை கீரை சாப்பிடுங்க சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து


முருங்கை, முருங்கை காய் என்றதும் உதட்டோரம் சிரிப்பு வந்து, டைரக்டர் பாக்யராஜ் நினைவில் வருகிறாரா? தப்பே இல்லங்க. ஏனா, முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. அதை தான் டைரக்டரும் சொல்லி இருப்பாரு. முருங்கை கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்ட போதும் ஹாஸ்பிடல் போற செலவே இருக்காது.




* சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை கீரை ஒரு நல்ல மருந்து.
* முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டார்கள் டாக்டர்கள்.
* அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும் 8 வகை அமினோ அமிலங்கள், முருங்கையில் அப்படியே உண்டு.
* குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் சாப்பிடலாம்.
* ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது.




* தினமும் காலையில் இதை சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.