Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 23, 2020

இனி தமிழகம் முழுவதும் ரூ.30க்கு மூலிகை பெட்ரோல்!


மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சி கலந்து ஆச்சர்யம் அனைவருக்கும் எழும். அதுமட்டுமின்றி யார் அந்த ராமர் பிள்ளை என்ற கேள்வியும் நமக்குள் எழும். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தான் ராமர் பிள்ளை.

கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் மாற்று எரிபொருளை கண்டுபிடித்துள்ளார் ராமர் பிள்ளை.




500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருள்களை சேமித்து வைத்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் அளவிற்கு கன்னியாகுமரி - நாகர் கோவில் இடையே தொழிற்சாலை ஒன்று தயாராகவுள்ளதாகவும் ராமர்பிள்ளை கூறுகிறார்.

பெட்ரோலுக்கு தேவையாக மூலிகைகள் விளைவிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக கூறும் ராமர் பிள்ளை, காப்புரிமை பெற்றவுடன் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 20, டீசல் ரூ 24-க்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கிறார். இதற்காக தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை முகவர்களையும் புக் செய்துவிட்டார் ராமர் பிள்ளை.



மேலும் மூலிகை பெட்ரோலை உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்திலும் பதிவு செய்துள்ளார். பிப்ரவரி 27-முதல் மூலிகை பெட்ரோல் தமிழகம் முழுவதுமுள முகவர்கள் மூலம் நேரடியாக கிடைக்கும் என ராமர் பிள்ளை நம்பிக்கை தெரிவிக்கிறார்.