Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 7, 2020

ஆதார் கட்டாயம்... இனி தேர்வு மையத்தை தானே தேர்ந்தெடுக்க முடியாது...-டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிரடி மாற்றங்கள்!


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி முறைகேட்டுக்கு தொடர்பானவர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில் இனி நடக்கவிருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி தமிழக அரசுத் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய பெரும்பாலான தேர்வுகளில் நம்பகத்தன்மை குறைந்திருக்கிற இந்த சூழலில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பிறகு அது சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள போவதாக தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்பொழுது முக்கியமான சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்திருக்கிறது. அதில் புதிய மாற்றமாக மூன்று விஷயங்களை சேர்த்துள்ளனர். ஒவ்வொரு தேர்வு நடைமுறைகளும் முழுமையாக நிறைவடைந்த பிறகு அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவருடைய விவரமும், அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.




அதன் தொடக்கமாக 181 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட 2019 குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 181 தேர்வர்களின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.
அடுத்ததாக, தேர்வு நடவடிக்கைகள் அனைத்துமே முடிவடைந்த பிறகு எழுத்துத்தேர்வு ஓஎம்ஆர் தாள் நகலை தேர்வர்கள் பெறமுடியும். அதற்கான உரிய கட்டணம் எவ்வளவு என்று பின்னர் அறிவிக்கப்படும். அந்த கட்டணத்தை செலுத்தினால் உங்களுடைய ஓஎம்ஆர் அதாவது, விடைத்தாளை பெற முடியும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




மூன்றாவது விஷயமாக, கலந்தாய்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பணியிடத்தையுமே தேர்வு எழுதிய பிறகு எந்த பகுதியை தேர்வு செய்கிறார்கள் என்பது கலந்தாய்வு மூலமாகத்தான் உறுதி செய்யப்படுகிறது. அப்படி கலந்தாய்வு நடைபெறும் நாட்களில், அந்தந்த நாட்களின் இறுதியில் துறைவாரியாகவும், மாவட்ட வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலி இடங்கள் பற்றிய விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.
அடுத்ததாக தேர்வு மையம், இனி தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதக்கூடிய தேர்வு மையத்தை தேர்வரே தேர்வு செய்ய முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிக சிரமம் இல்லாதபடி குறிப்பிட்ட தேர்வரின் வட்டம் மற்றும் தாலுகா அடிப்படையில் மாற்றம் செய்து தேர்வாணையமே அவர்களுக்கு தேர்வு மையத்தை தேர்வு செய்யும் என கூறியிருக்கிறார்கள்.




அடுத்ததாக, ஆதார் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்கும் வண்ணம் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.