Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 5, 2020

"கற்றல் திறனை அளவிட பொதுத்தேர்வு என்றுமே தீர்வாகாது!" - அரசுக்கு நன்றி சொன்ன சூர்யா



தமிழக அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை இந்தக் கல்வியாண்டிலிருந்தே அமலாகும் என்று அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், எதிர்கட்சியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.



பொதுத் தேர்வுகள், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும், இது தேவையில்லாதது என்ற கருத்தை அவர்கள் முன்மொழிந்தனர். இருந்தும் தமிழக அரசு, பொதுத் தேர்வுக்கான அட்டவணை, தேர்வு மையம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்