Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 5, 2020

வருகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு


ஜிஎஸ்டி லாட்டரி: ரூ.1 கோடி வரை பரிசு பெற வாய்ப்பு
சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி லாட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கடையில் பொருட்கள் வாங்கும் போது, பில் வாங்கினால் அந்த பில்லில் இருந்து பொருள் வாங்கியவர்களுக்கு லாட்டரி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், ரசீது கேட்டு வாங்க வேண்டும். இதை ஊக்குவிக்க, புதிய 'ஜி.எஸ்.டி., லாட்டரி' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நுகர்வோர், பொருட்கள் வாங்கும் போதும் சேவைகளை பெறும்போதும், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரை வரி செலுத்துகின்றனர்.




இந்த வரி செலுத்தப்பட்ட ரசீதை ஒருவர், மத்திய அரசு அறிவிக்க உள்ள, லாட்டரி சீட்டு வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். அவற்றின்படி, குலுக்கல் முறையில், வெற்றி பெற்றோர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, 10 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மின்னணு முறையில், குலுக்கல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும்.