Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 9, 2020

ஒற்றைத் தலைவலி பாதிப்பா? இதை செய்யுங்கள்...!!!


மைக்ரைன் என்று சொல்லக்கூடிய ஒற்றைத்தலைவலி பாதிப்பு பலருக்கும் இருக்கின்றது. அடிக்கடி தொடரும் இந்த வலிக்காக அதிகப்படியான மாத்திரைகளை எடுத்துகொள்வோரும் நம்மில் ஏராளம். இதனால் பக்க விளைவுகளும் அதிகம் உண்டாகின்றது. பக்க விளைவுகள் எதுவுமின்றி ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபட கீழே உள்ள முறைகளை செய்தாலே நல்லது என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.




கேரட், பீட்ரூட் சாறு: ஒற்றைத் தலைவலி உண்டாகும்போது 1 டம்ளர் கேரட் சாற்றில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும். முட்டை கோஸ் ஒத்தடம்: முட்டைகோஸ் இலைகளை நன்றாக இடித்து ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதனைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி மறையும். வெள்ளை எள்ளு: வெள்ளை எள்ளை பாலில் ஊற வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் இப்படி செய்து வந்தால் ஒற்றை தலைவலி வராது.




சாப்பிட வேண்டியவை : வைட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும். இவை அனைத்தும் செய்தும் ஒற்றைத் தலைவலி தாக்கம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.