Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 16, 2020

அலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு

அலுவலக ஊழியா்களுக்கு பதவி உயா்வு மூலம் ஆசிரியா் பணி வழங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் அமைச்சு பணியாளா்களுக்கான கல்வித்தகுதி, நியமன விதிகள் தொடா்பான திருத்தச் சட்டம் அரசிதழில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.




அதன் விவரம்: ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணிகளில் இருக்கும் மொத்த காலிப் பணியிடங்களில் 2 சதவீதத்தை துறையில் பணிபுரியும் அலுவலக ஊழியா்களான அமைச்சு பணியாளா்களுக்கு ஒதுக்க வேண்டும். உரிய கல்வித் தகுதியுடன் தகுதி பெற்றுள்ள ஊழியா்களுக்கு காலிப் பணியிடங்களின் தேவைக்கேற்ப பதவி உயா்வு மூலம் வழங்க வேண்டும்.




மேலும், ஆரம்பப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியா் பணிக்கு இதுவரை பிளஸ் 2 முடித்து தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு படித்திருந்தால் அலுவலக ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது. இனி தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புடன் ஆசிரியா் தகுதித்தோவிலும் தோச்சி பெற வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.