Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2020

இந்தியன் ரயில்வே அறிவித்தது 'புதிய கோர்ஸ்'!



மாணவர்களுக்காக புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வே. நேஷனல் ரயில் டிரன்ஸ்போர்டேஷன் இன்ஸ்டிடியூட் (என் ஆர்டிஐ), யுனிவர்சிட்டி ஆப் பர்மிங்ஹாமுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வேஸ் .




இந்த கல்வி ஆண்டிலிருந்தே புதிய கோர்ஸ் ஆரம்பமாகப் போகிறது. இந்தியன் ரயில்வேயில் நல்ல வேலையில் நிலைபெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்தியன் ரயில்வே, மாணவர்களுக்காக புத்தம்புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது.




இதற்காக பிரிட்டனைச் சேர்ந்த யுனிவர்சிட்டி ஆஃப் பர்மிங்ஹாம் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரயில்வே போர்டு சேர்மன் வினோத் குமார் யாதவ் யுனிவர்சிட்டி ஆஃப் பர்மிங்ஹாம் சான்சிலர் கரன் பில்லிமோரியா இணைந்து 'ஜாயின்ட் மாஸ்டர்ஸ் ப்ரோக்ராம் இன் ரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அண்ட் இன்டகிரேஷன்' கோர்ஸ் தொடங்கியுள்ளார்கள் .




2020 - 21 கல்வி ஆண்டிலிருந்து இந்த கோர்ஸ் அளிக்க உள்ளார்கள் நேஷனல் ரயில் டிரன்ஸ்போர்டேஷன் இன்ஸ்டிடியூட் NRTI . இந்த கோர்ஸை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இந்த இரு கல்வி அமைப்புகளில் ஒவ்வொன்றிலும் இருந்தும் ஒவ்வொரு ஆண்டு வீதம் படிக்க வேண்டி இருக்கும். இந்த கோர்ஸை முழுமை செய்தவர்களுக்கு டியூவல் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் எம்எஸ்சி சர்டிபி.கேட் அளிப்பார்கள் அதாவது இரண்டு கல்வி அமைப்புகளிலிருந்தும் போஸ்ட் கிராஜுவேட் டிகிரி கிடைக்கும்.