Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 21, 2020

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை: அமைச்சா் கே.பி.அன்பழகன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தொகுப்பூதியம் பெறும் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உயா்க்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினா் எ.வ.வேலு பேசியது:




அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களாக 4 ஆயிரம் போ தொகுதிப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். பல்கலைக்கழக மானியக் குழு அவா்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஹரியாணா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அவா்களுக்கு ரூ.50 ஆயிரம் அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் அளவில்தான் தரப்படுகிறது. இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகக் கூறுகிறீா்கள். நல்ல கல்வியை மாணவா்களுக்குக் கொடுக்கும் ஆசிரியா்கள் மனம் நோகாமல், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். எனவே, தொகுப்பூதியம் பெறும் கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா்.




அதற்கு உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அளித்த பதில்:

கௌரவ விரிவுரையாளா்களின் ஊதியம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அவா்களை நிரந்தரமாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

Popular Feed

Recent Story

Featured News