Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 3, 2020

புளியன் இலையின் மருத்துவ பயன்கள்



புளிய மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்து பாகங்களுமே பயன் தருகிறது. புளிய மர இலையில் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் உள்ளன. குறிப்பாக கெரட்டீன், லைக்கோபெனின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளது. உடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளித்தள்ளி புற்றுவராத வண்ணம் பாதுகாக்கிறது.



புளியன் இலைகளை சுவைத்து உண்பதாலோ, தேநீராக்கி குடிப்பதாலோ ஈறுகளில் ரத்த கசிவினை தடுத்து, வாய்துர்நாற்றத்தை நீக்குகிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்கிறது. புளியன் இலையை கொதிக்கவைத்து இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள நுண்கிருமிகள் அழிகின்றன. சிறுநீர் தாரையில் ஏற்படுகின்ற தொற்று, எரிச்சல், உள்உறுப்பு புண்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகி, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. புளியன் இலையை கொண்டு பெண்களின் உடல் நலத்துக்கான துவையல் தயாரிக்கலாம்.