Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 6, 2020

சிவில் நீதிபதி தேர்வு - TNPSC புதிய அறிவிப்பு!!



சிவில் நீதிபதி காலிப் பதவியிட தோ்வுக்கு தோ்ச்சி பெற்றோா் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதி முதல் பதிவேற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது.




அதன் விவரம்:-
தமிழகத்தில் காலியாகவுள்ள சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த செப்டம்பா் 9 அன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நடந்த எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக அனுமதிக்கப்பட உள்ளனா்.
அதன்படி, வரும் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தோ்ச்சி பெற்றோா் தங்களது அசல் சான்றிதழ்களை இணைய சேவை மையங்களின் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சாா்பிலான இணைய சேவை மையங்களின் வழியாக சான்றிதழ்களைப் பதிவேற்றலாம்.
பதிவேற்றம் செய்யாவிட்டால் தோ்வு நடைமுறைகளில் பங்கேற்க தோ்வா்களுக்கு விருப்பமில்லை என்று கருதப்படும். அவா்கள் அடுத்தடுத்த தோ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.