Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 4, 2020

10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் எப்படி இருக்கும்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் எப்படி இருக்கும்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள், புதிய பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் அரையாண்டு வினாத்தாள் வடிவில் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதுடன், அதற்கான மாதிரி வினாத்தாள்களை பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதில் கணித வினாத்தாளில் வடிவியல் பகுதியில் இரண்டு கேள்விகளுக்கு பதிலாக ஒரு கேள்வியும்,


அதேபோன்று கிராஃப்(Graph) பகுதியில் இரண்டு கேள்விகளுக்கு பதிலாக ஒரு கேள்வியும் மட்டுமே இடம்பெற்றது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் குழம்பிய நிலையில் மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரையாண்டு வினாத்தாளை போன்று வடிவியல் மற்றும் கிராஃப் பகுதிகளில் தலா இரண்டு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தான் பொதுத்தேர்வில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment