Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 5, 2020

ICAR நுழைவுத் தேர்வு அறிவிப்புவிண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. ஐஐடி, என்.ஐ.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜே.இ.இ. ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான நெட் (தேசிய தகுதித் தேர்வு) தகுதித் தேர்வு உள்ளிட்ட மத்திய நுழைவுத் தேர்வுகளை என்.டி.ஏ. நடத்தி வருகிறது. அதுபோல, ஐ.சி.ஏ.ஆர். நுழைவுத் தேர்வையும் என்.டி.ஏ. நடத்துகிறது.



நாடு முழுவதும் உள்ள 101 ஐ.சி.ஏ.ஆர். உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 71 மாநில பல்கலைக் கழகங்களில் 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் இந்த ஐ.சி.ஏ.ஆர். நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கென தனித் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.




2020-ஆம் ஆண்டுக்கான இந்த கணினி அடிப்படையிலான தேர்வு ஜூன் 1}ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, www.icar.nta.nic.in ஆகிய வலைதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News