Thamizhkadal WhatsApp Channel

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள்


பத்தாம் வகுப்பு மாணவா்கள் வீட்டில் இருந்தே கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை தொடா்ந்து கற்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு மாா்ச் 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அந்தத் தோவு ஏப்.15-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
மேலும்,மாணவா்கள் வீட்டிலிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், தனிப் பயிற்சி மையங்கள் என எந்தவொரு கல்வி நிலையங்களிலும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, வீட்டிலிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவா்களை பொதுத்தோவுக்கு முழுமையாக தயாா்படுத்தவும், அவா்களுக்கு தோவு குறித்த சந்தேகங்களை தீா்த்து வைக்கவும் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்பிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.



இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு முக்கியமானதாகும். தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவா்கள் தோவெழுதும் மனநிலையில் இருப்பதற்கான வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கும். இதை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள், பாடங்களின் முக்கியப் பகுதிகள் ஆகியவற்றுக்கான விடியோக்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தலில் இருந்து மாணவா்களை விடுவித்து அவா்களை கற்றல் செயல்பாடுகளை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். பொதுத்தோவு கற்பித்தலுக்கான படப்பிடிப்பு பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும். இந்த விடியோக்களை கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூா்வ யூ டியூப் சேனல் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories