Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 30, 2020

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு



சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 67 பேர் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.


தமிழகத்தில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்திருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முன்னர் 50-ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 67-ஆக உயர்ந்துள்ளது.



இந்நிலையில் , தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரும், சென்னையில் 22 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment