Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 30, 2020

கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள்



வாஷிங்டன்: மக்களை மரண பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவி இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து பாதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.




நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. உண்மையில், இது பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்திருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.

இந்த வைரஸ் விலங்குகளுக்கு உருவாகி மனிதனுக்கு பரவி, பின்னர் பல ஆண்டுகளாக படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்தன் விளைவாக. இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமாகி இருக்கிறது. பெரும்பாலும் இந்த கொரோனா வைரஸ் வகைகள் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார்.




இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்விஞ்ஞானிகள் ஆய்வு
பல விஞ்ஞானிகள் ஆய்வு

கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரம்பாட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் லிப்கின், சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் கேரி ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வை நடத்தினர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று நேச்சர் மெடிசின் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.




இயற்கையாய் உருவானது
மரபணு வரிசை

இந்த ஆய்வின் முடிவில் " நம்மால் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களில் உள்ள மரபணு வரிசை தரவுகளை ஒப்பிட்டு பார்த்தில் SARS-CoV-2 இயற்கையாகவே உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும்" என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.


விசித்திரமான நிமோனியா
இத்தாலியில் பரவியது




இது ஒருபுறம் எனில், இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் "விசித்திரமான நிமோனியா வைரஸ்" பரவி வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதை பற்றி மக்கள் பலரும் அறியும் முன்பே கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம் என்று சொல்கிறார்.


இத்தாலியில் வந்திருக்கு
வுகானுக்கு முன்பே பரவல்

மிலனில் உள்ள மரியோ நெக்ரி இன்ஸ்டிடியூட் ஆப் மருந்தியல் ஆராய்ச்சியின் இயக்குனர் பேராசிரியர் ரெமுஸி இதுபற்றி கூறுகையில், "கடந்த ஆண்டு டிசம்பருக்கு முன்பு சில அறிகுறியற்ற நிகழ்வுகள் சீனாவைச் சுற்றி அல்லது வெளிநாடுகளில் இருந்திருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிமோனியாவின் அசாதாரண பரவல்கள், வுஹான் தலைப்புச் செய்திகளாக ஆவதற்கு முன்பே , இத்தாலியில் மோசமான பாதிப்புக்குள்ளான லோம்பார்டியில் ஏற்கனவே வைரஸ் பரவி இருக்கிறது" என்றார்.





சீன மருத்துவரும் கருத்து
உண்மை ஒரு நாள் வரும்

பேராசிரியர் ரெமுஸியைப் போலவே பேசிய சீன மருத்துவர், பெய்ஜிங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார், இவர் கூறும் போது, கடந்த ஆண்டு பல நாடுகளில் நிமோனியா வைரஸ் பரவியது குறித்து நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே "முழு விஷயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்" என்றார்.


சீனாவே முதலில் கண்டுபிடித்தது
உலகுக்கு அறிவித்துள்ளது




மற்ற நாடுகளைப் போலவே சீனாவின் வுஹானில் உள்ள டாக்டர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிய சிறிது காலத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, அந்த தகவலை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் உனே கிடைக்கச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த வைரஸ் உடனடியாக தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியதால் இப்போது உலகின் மூலை முடுக்கெல்லாம் பல லடசம் பேரை பாதித்து உள்ளது.

No comments:

Post a Comment