Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 24, 2020

இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் பதிவேற்றம் தள்ளிவைப்பு


அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் பதிவேற்றம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
இளநிலை அறிவியல் அலுவலா், ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான இரண்டாவது கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெறவுள்ளது. இதற்காக சான்றிதழ்களை, வரும் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டுமென தேர்வா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.




இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக இணைய சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், தேர்வா்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் பணியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதியானது பின்னா் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment