Search This Blog

Monday, March 30, 2020

கொரோனா தடுப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை!

0 comments
கொரோனா தடுப்பு பணியில் பள்ளிகல்வித்துறை - தன்னார்வ ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு ?
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அடுத்தகட்ட பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையில் கரொனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசரகால செய்தியில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்களின் அவரவர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் விபரங்களை பெற்று பட்டியலிட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment