Subscribe Us

Tuesday, March 24, 2020

மோடியின் அடுத்த அதிரடி.. கொரோனாவை ஒழிக்க இதுதான் ஒரே வழி..

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் ஒரு சிலருக்கு பரவியுள்ளது. இதனால் வேறு யாருக்கும் இந்நோய் பரவாத வகையில், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இதனை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய மக்கள் அனைவரும் இன்று ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்ற வென்றும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


அதன்படியே மக்கள் அனைவரும் தற்போதுவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இந்த சுய ஊரடங்கு நடைமுறை காலை 5 மணி வரை அமலில் இருக்க வேண்டும் என மீண்டும் மோடி தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் நாளை காலை 5 மணி வரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் சமூகவலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

No comments:

Post a Comment

Popular Feed