Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 29, 2020

பொது முடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும்



நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன .
இதனிடையே , தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . மேலும் 10 வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் உறுதியாக தெரிவித்தார் . மேலும் , எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது கொடர்பாக ஒரு குழு அமைத்து , ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில் , பொது முடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது . போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment