Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 28, 2020

10ம் வகுப்புக்கு முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஆலோசனை



சென்னை: முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு... பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தேர்வை ரத்து செய்யுமாறு, கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வை ரத்து செய்யாமல், ஜூன் மாதம் நடத்தலாம் என, கூறியுள்ளனர்.
தற்போதைய சூழலில், அனைத்து மாநிலங்களிலும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற மத்திய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் நடத்தாவிட்டால், மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.
மேலும், 9ம் வகுப்பு வரை, தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளதால், பல மாணவர்களால், பத்தாம் வகுப்புக்கு வரும்போது கூட, தாய்மொழியில் எழுத, படிக்க தெரியாத நிலை ஏற்படும். எனவே, தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில், மொழி பாடங்களை விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்றும், கேள்விகளை குறைத்தோ, பாடங்களை குறைத்தோ நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment