Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 28, 2020

2025 வரை பணியாளர்களுக்கு வீட்டில் இருந்துதான் வேலை - பிரபல நிறுவனம் அதிரடி!


தங்களின் 75% சதவிகித ஊழியர்களை 2025 ஆம் ஆண்டு வரை வீட்டிலிருந்தே வேலையைச் செய்ய வைக்க முடியும் என்று டிசிஎஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் எல்லா துறைகளிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த தாக்கம் பன்னாட்டு நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை. அதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளன. அந்த வகையில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் 90 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இனிவரும் நாட்களில் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய டிசிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தங்களின் 25 சதவீத ஊழியர்களை மட்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து, மற்ற 75 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்த பணி செய்ய வைக்க இருப்பதாக தெரிகிறது. வரும் 2025 வரை 75 சதவீத பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து தான் வேலை என்று தெரிகிறது. ஆனால் இதுகுறித்த உறுதியான முடிவு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகே தெரியவரும்

No comments:

Post a Comment