Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 26, 2020

திருப்பதி கோவிலுக்கு உண்டியல் செலுத்த இருந்த ரூ 40,000/பணத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்



திருப்பத்தூர் மாவட்டம் , கந்திலி ஒன்றியம் , செல்லரப்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக திருமதி.கற்பகவல்லி பணியாற்றி வருகிறார்.அவரது கணவர் கொடுமாம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் திரு.மணிமாறன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கோரோனா பாதித்தவர்களின் குடும்பங்களின் நிலையை கண்டு வருத்தப்பட்டனர். மேலும் ஊரடங்கு காரணத்தால் கூலி வேலைக்கு செல்பவர்கள் அன்றாடம் உணவிற்கு என்ன செய்வார்கள் என எண்ணி அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார்.
திருப்பதி கோவிலுக்கு பிராத்தனைக்காக உண்டியலில் பணம் சேர்த்து வந்தனர்.இந்த நேரத்தில் இப்பணத்தை தம் பள்ளியில் படிக்கும் (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, செல்லரப்பட்டி) LKG, UKG மாணவர்களின் குடும்பங்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் தலா ரூ 1000/ என 40 பேருக்கு ரூ.40,000/ என கொடுத்து உதவினர்.




கடவுளுக்கு செலுத்த வேண்டிய பணத்தில் ஏழைக்கு உதவிய இந்த ஆசிரியர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தருவார் என கல்விசிறகுகள் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment