Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 7, 2020

கொரோனாவில் இருந்து கோவையில் 5 பேர் நலம்பெற்றனர்!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில் இந்த தகவல் சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில அமைந்துள்ளது.
கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரயில்வே பெண் மருத்துவர் மற்றும் அவரது 10 மாத குழந்தை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் கொரோனோ தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதேபோல் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர், ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய இளம்பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த 5 பேரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர்கள் 5 பேரையும் வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவர்களும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் 59 பேர் கோவையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவேண்டும் என விரும்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment