Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 12, 2020

கொழுப்பு செல்களை கரைக்கும் வெள்ளரிக்காய்!



வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.
எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது. 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களை கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.
மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.
தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும். நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும்.

No comments:

Post a Comment