Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 12, 2020

'ஆரோக்ய சேது' ஆப் இருக்கா... அப்ப நீங்க வேற ஊருக்கு போகலாம்!!



மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'ஆரோக்ய சேது' செயலியைப் பயன்படுத்தி, தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் வேறு ஊர்களுக்குப் பயணிக்கலாம்.
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு சமீபத்தில் இந்த செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்தச் செயலியையே இ-பாஸாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் நேற்று உரையாடிய போது, பிரதமர் நரேந்திர மோடி இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்த 'ஆரோக்ய சேது' செயலியின் மூலம் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
கொரோனா வைரஸ் தங்களை எந்த அளவுக்குத் தாக்கும் என்பது தொடர்பான வீரியத்தை அறியவும் இந்தச் செயலி உதவும்.
இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள மற்றவர்களின் தொடர்புகளும் நமக்கு எளிதாகக் கிடைக்கும். மேலும், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தொடர்பான தகவல்களும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பிரைவஸி எனப்படும் ஒருவருடைய ரகசியம் இந்தச் செயலியில் காக்கப்படுகிறது. கொரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை தேவைப்படும் வரை தனி நபரின் விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.
புளூடூத், அல்காரிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, 11 மொழிகளில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment