Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 2, 2020

கொரோனா வைரஸ் எதிரொலி: சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் தேர்வில்லாமல் தேர்ச்சி



கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே இந்தநிலையில் இதேபோல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சிக்கு உரியதாக உள்ளது இருப்பினும் ஒன்பது முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment