உயர்கல்வி மாணாக்கர் சேர்க்கை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகுமா?


சென்னை: கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்த வாரம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு.
கொரோனா ஊரடங்கால், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நுழைவு தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில், 12ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாமல், பல பாடங்களுக்கான் தேர்வுகள் பாக்கி உள்ளன. இதனால், உயர்கல்வி நிறுவனங்களில், ஜூலை மாதம் மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து ஆய்வுசெய்ய, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் தலைமையில் ஒரு குழுவும், ஹரியானா மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குகத் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுக்கள், பல்வேறு தரப்பிலும் உரிய ஆலோசனை மேற்கொண்டு யுஜிசி அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அந்த அறிக்கையில், வரும் செப்டம்பரில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இதுதொடர்பாக யுஜிசி தரப்பில் கூறியதாவது, பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், உரிய ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து யுஜிசி கமிஷன் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதன் பின்னர் ஊரடங்கு நிலவரத்தின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்படும். உரிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel