இதற்கிடையில் , பள்ளிகளை மீண்டும் திறந்ததும் , ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சில தனியார் பள்ளிகளால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் தெரியவருகிறது.
அரசால் அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்புமுதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி சில மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்கள் அவ்வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுவைத்து அதனடிப்படையில் தேர்ச்சி வழங்குவது என்பது அரசின் ஆணையினை மீறிய செயலாகும். இதுவிவரம் மிகக் கடுமையாக நோக்கப்படும் என்றும் , விதிகளின்படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் அதன் விவரத்தினை ஒரு வாரகாலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும் தெரிவிக்கலாகிறது.








No comments:
Post a Comment